Thidal Project – Ground Reconstruction

Ground-Hand-Over-3

யாழ் இந்துக்கல்லூரி ஐக்கியராட்சிய பழைய மாணவர் சங்கத்தினால் திடல் திட்டத்தின் கீழ் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வடமாகாணத்தின் சிறந்த பாடசாலை விளையாட்டு மைதானமாக புனரமைக்கப்பட்டு வந்த பாடசாலை மைதானம் இன்றைய தினம் (03/07/2020) முதல்கட்ட வேலைகள் நிறைவடைந்து பாடசாலையிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திரு.ஹரிகரன் ஒப்பந்தக்காரரிடம் பொறுப்பேற்று பாடசாலையிடம் கையளித்தார்.கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள், திடல் திட்டத்தினை மேற்பார்வை புலமை ஆலோசனைகள் வழங்கிய BDCE நிறுவனத்தினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.