Teachers Honoured Ceremony for COVID 19 Activity

- Posted by Admin
- Posted in College News
கொரோணா இடர்காலத்தில் மாணவர்களிற்கு இடர்பணியாற்றிய எமது கல்லூரியின் ஆசிரியர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள், இணைந்து பணியாற்றிய அயற்பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு 12.07.2020 அன்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில், கல்லூரி அதிபர் திரு.ர.செந்தில்மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.மணிமார்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் இந் நிகழ்வின் போது பிரதி முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.