Teachers Day – Sports Festivel
- Posted by Admin
- Posted in College News
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் சார்பில் மாணவ முதல்வர்களுக்குமிடையில் சிநேக விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன. அந்த வகையில் 05.10.2020 ஆம் திகதி உதைபந்தாட்டப் போட்டியும், 06.10.2020 ஆம் திகதி கரம், சதுரங்கம், துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன.
அந்த வகையில் உதைபந்தாட்டப் போட்டியில் 3-0 இலக்குகள் என்ற அடிப்படையில் ஆசிரியர் அணியும், சதுரங்கப் போட்டியில் 4-3 என்ற அடிப்படையில் மாணவர் அணியும், கரம் போட்டியில் இரட்டையர்களாக 7-4 என்ற அடிப்படையில் ஆசிரியர் அணியும், துடுப்பாட்டப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மாணவர் அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது. 12 பந்துப் பரிமாற்றத்தைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிரியர் அணி 12 பந்து பரிமாற்றத்திற்கு 5 ஆட்டமிழப்புக்களுடன் 104 ஓட்டங்களைப் பெற, மாணவர் அணி 5 ஆட்டமிழப்புக்களுடன் 105 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுக் கொண்டது.
உதைபந்தாட்டம் (05.10.202020)
துடுப்பாட்டம் (06.10.2020)