Jaffna Hindu College
  • Home
  • LMS
  • College News
  • Downloads
Search
  • HOME
  • SCHOOL PROFILE
    • History of the School
    • Founders
    • Motto, Vision & Mission
    • Emblem & Flag
    • School Anthem
    • House System
    • Past Principals
  • ADMINISTRATION
    • Management Committee
    • Principal
    • Deputy Principal – Administration
    • Deputy Principal – Edu.Development
    • Assistant Principal
    • Staffs
      • Academic Staffs
      • Non Academic Staffs
  • ACADEMIC
    • Learning Managment System
    • Exams & Evaluation
  • CO-CURRICULUM
    • Clubs, Societies & Unions
    • Sports & Games
  • STUDENTS
    • Students Code of Conducts
    • Students Walfare
    • Prefects
  • ACHIVEMENTS
    • Education Achivements
    • Co-Curriculum Achivements
  • FACILITIES
  • GALLERY
    • Medium Gallery
    • Video Gallery
    • Gallery Carousel View
    • 4 Columns Gallery
  • COLLEGE NEWS

பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிமுறைகள்

பாடசாலை வளாகத்தினுள் உள்நுழைதல் மற்றும் பொது விதிமுறைகள்.
      • தினமும் மாணவர்கள் காலை 6.00 மணிக்கு முன்பாக கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
      • 8.10 மணிக்கு பிந்தி வரும் மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் பிந்தி வருமிடத்து தந்தை அல்லது தாயுடன் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.
      • தினமும் மாணவர்கள் ஒவ்வொருவரும் மாணவர் அறிக்கை புத்தகத்துடன் சமுகமளித்தல் வேண்டும் .
      • முன் அனுமதியின்றி பாடசாலைக்கு சமுகம் தராத மாணவர்கள் அதற்கான காரணத்தை அறிக்கைப் புத்தகத்தில் பதிந்து பெற்றோர் கையொப்பம் இடல் வேண்டும்.
      • 3 நாட்கள் தொடர்ச்சியாக வராத மாணவர்கள் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் .
பாடசாலை சீருடை மற்றும் பொது விதிமுறைகள்.
      • மாணவர்கள் சீருடை மற்றும் தலைமுடி ஒழுங்கமைப்பு காலணி ஆகியன கல்லூரி விதிமுறைக்கு அமைய இருத்தல் வேண்டும் . அவ்வாறு இல்லாத மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் .
வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லுதல்.
      • வகுப்பறையில் இருந்து மாணவர்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
      • தேவை ஏற்படுமிடத்து வெளியில் செல்லல் மாணவர் ஒருவர் மட்டும் அனுமதி அட்டையுடன் செல்லல் வேண்டும் . 
      • வகுப்பறையில் இருந்து வேறு பாடத்திற்கு மாணவர்கள் செல்லும் போது ஒழுங்காக வரிசையில் செல்லல் வேண்டும் . 
      • வகுப்பறையில் மாணவர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
      • இடைவேளையின் போது மாணவர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே செல்லல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது .
பாடசாலை மற்றும் வகுப்பறைச் சுத்தம்
      • வகுப்பறை சுத்தம் மற்றும் வகுப்பறை சுற்றாடல் சுத்தம் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் உறுதி செய்து கொள்ளல் வேண்டும் .
      • பொது நடத்தை பாடசாலை நிகழ்வுகளில் ஒழுங்காகப் பங்குபற்றல், அமைதி பேணுதல் என்பதைக் கடைப்பிடிப்பதுடன் ஏனைய வெளிப்பாடசாலை நிகழ்வுகளிலும் பாடசாலையின் கௌரவத்தை முழுமையாக உயர்த்துவதுடன் தங்களின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும் .
வசதிகள் சேவைக்கட்டணம்
      • மாணவர்கள் வசதிகள் சேவைகள் சேவைகள் கட்டணத்தை முதல் தவணையிலேயே செலுத்துதல் பயனுடையதாகும் .
ஒழுக்கச் சான்றிதழ்
      • ஆசிரியர்களால் மாணவர் அறிக்கைப் புத்தகத்தில் பதிவு செய்து நிருபிக்கப்பட்ட சாதனைகள் மட்டுமே ஒழுக்கச் சான்றிதழில் பதிவு செய்யப்படும் . 
      • பரீட்சைகளின் பெறுபேறுகள் , பாடசாலை விடுகைப் பத்திரம் போன்றவற்றுக்கு ஏறக்குறைய 7 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் . 
      • இதற்கான விண்ணப்பங்கள் புதன் , வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும் . பாடசாலையிலிருந்து ஒருவர் விடுகை பெற்று ஒரு வருடத்திற்குள் நற்சான்றிதழையும் , பாடசாலை விடுகைப் பத்திரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் . 
      • மாணவர் அறிக்கைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் யாவற்றையும் பதிவ செய்து உரிய வகுப்பு பொறுப்பாசிரியரின் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் .
வருகை தருணர்கள்
      • எந்தவொரு தருணத்திலும் , அனுமதியில்லாமல் எந்தவொரு காரணத்திற்காகவும் , எந்தவொரு நபரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் . 
      • வருகை தரும் எந்தவொரு நபரும் பொருத்தமான ஆடைகள் அணிந்து மட்டுமே பாடசாலைக்கள் வரவேண்டும் . ( கவனக் கலைப்பை ஏற்படுத்தும் வகையில் ஆடைகள் அணிதலாகாது )
மாணவர் வரவும், பரீட்சைகளும்
      • தோற்றுவதற்க , பாடசாலைக்கு 80 * ஆன வரவினைக் கொண்டிருக்க வேண்டும் . 
      • மாணவர் எவராவது புறக்கிருத்திய , கணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கேற்கும் போது வகுப்பறை அறிக்கைப் புத்தகத்தில் வகுப்பாசிரியரினால் முறைப்படி பொருத்தமான பக்கத்தில் குறிப்பிட்ட நடத்தை பற்றிய விவரத்தைப் பதிவு செய்வதுடன் , மாணவர் அறிக்கைப் புத்தகத்திலும் அதனைக் குறிப்பிட்டு வகுப்பாசிரியரின் கையொப்பம் பெற்றிருத்தல் வேண்டும் . ( இதற்காக மாணவர்களின் காலை அல்லது மதிய நேர வரவு கவனத்தில் கொள்ளப்படும் ) 
      • ஒவ்வொரு தவணை முடிவின் போது , நடத்தப்படும் பெற்றோர் , ஆசிரியர் , மாணவர் சந்திப்புக் கூட்டத்திற்கு அனைவரும் சமுகமளிக்கல் வேண்டும் .
விளையாட்டு நடவடிக்கைகள்
      • பாடசாலை விளையாட்டுக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களினது பாடசாலை வருகை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படும் . 
      • மாணவர்களின் 805 ஆன வருகையினை காலை , மதிய நேர வகுப்பறைப் பதிவினூடாகவும் இவ்வரவு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் . மேற்படி முறையான வருகையைப் பதிவு செய்து கொள்ளாத எந்தவொரு மாணவரும் பாடசாலை சார்பாகவோ , பயிற்சிகளிலோ ஈடுபடமுடியாது . 
      • காலையில் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களே பிற்பகல் நடைபெறக்கூடிய விளையாட்டு நடவடிக்கைகளில் பங்குபற்றலாம் . இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தமது ஒழுக்கம் , வருகை ஆகியன தொடர்பாக வகுப்பு ஆசிரியர்களின் சிபார்சினைப் பெற்றிருத்தலுடன் , விளையாட்டுக் கழகங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு வருகை தொடர்பாக தெரியப்படுத்தல் வேண்டும் .
மாணவர் பிரத்தியோக அறிக்கையினைப் பார்வையிடல்
      • பெற்றோர்கள் www.jhc.lk எனும் வலையமைப்பின் மாணவர் பிரத்தியேக அறிக்கையினைப் பார்வையிட்டுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் .
மருத்துவ வசதிச் சந்தர்ப்பங்கள்
Accordion Content
கல்லூரிச் சுற்றுலா
      • சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் பெற்றோரிடம் அனுமதிக் கையொப்பங்கள் பெற்றிருத்தல் அவசியமாகும் . 
      • வகுப்பாசிரியரின் வருகையின்றி சுற்றுலா செல்ல முடியாது . 
      • மாணவர்கள் சுற்றுலா செல்லுமிடத்தில் ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
      • ஒரு இரவு மட்டும் தங்கும் சுற்றுலாவாக இருப்பின் முதல் நாள் பாடசாலை நாளாகவும் இரண்டாம் நாள் விடுமுறை நாளாகவும் இருக்க வேண்டும் .
இணைபாடவிதான, புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பங்குபற்றல்
      • பாடசாலையில் நடைபெறும் விளையாட்டுக்கள், ஏனைய புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது . அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடசாலைக்குரிய சீருடையோ அல்லது அந்தத் துறைக்குப் பொறுப்பான ஆசிரியரினால் விதந்துரைக்கப்படும் சீருடையே அணிதல் வேண்டும் . 
      • பாடசாலைக்கு வெளியே நடைபெறுகின்ற இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பங்கேற்க முன்பு அதிபரின் அனுமதியை எழுத்து மூலம் பெற்றிருப்பதோடு , அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியருடன் சேர்ந்தே மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும் . 
      • பாடசாலையின் கௌரவத்தினையும் , நற்பெயரையும் , புனிதத்தையும் பாதுகாத்தல் ஒவ்வொரு மாணவரினதும் கடமையாகும் . இவற்றுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொண்டால் நிர்வாகத்தினால் வழங்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் . 
      • பாடசாலைக்கு வெளியே விளையாட்டுக்கள் , ஏனைய போட்டிகள் போன்ற புறக்கிருத்திய வேலைகளில் ஈடுபடும்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனுக்குரிய பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் . 
      • மாணவர்களாகிய உங்களது நடத்தையும் , சொற்களும் மிகவும் பண்புள்ளவையாக அமைதல் வேண்டும் . நீங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது . மாணவர்களாகிய உங்களது சொற்களாலோ , செய்கையாலோ பிறர் மனதைத் துன்புறுத்தாத வகையில் நடக்க வேண்டும் . 
      • பாடசாலை நடைபெறும் காலத்தில் எந்தவொரு விளையாட்டைச் சேர்ந்த அங்கத்தவரும் வெளியில் உள்ள கழகங்களில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அதிபரின் முன் அனுமதியின்றி அனுமதிக்கப்படமாட்டார்கள் . 
      • பாடசாலைக்கு வருகை தராத அதே நாளில் எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபடும் அங்கத்தவரும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் . 
      • பாடசாலை நடைபெறும் காலத்தில் எந்தவொரு விளையாட்டைச் சேர்ந்த அங்கத்தவரும் வெளியில் உள்ள கழகங்களின் பயிற்சிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் . 
      • பாடசாலை நாட்களில் 80 சதவீதத்திற்கு மேல் வருகையுள்ள மாணவர்களே பாடசாலைக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியும் , 
      • எல்லாப் பயிற்சியாளர்களும் பயிற்சி முடிந்தவுடன் பாடசாலைச் சுற்றுச் சூழலில் இருந்து வெளியேறுவதுடன் எவ்வளவு விரைவாக வீடுகளைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றடைய வேண்டும் . 
      • மன்ற , கழக , சங்கங்களின் தலைவர்கள் தமது ஆண்டறிக்கையை வருட எல்லைக்குள் அதிபருக்கு சமர்ப்பித்தல் வேண்டும் . அவ்வாறு ஆண்டறிக்கையை வருட முடிவில் சமர்ப்பிக்காவிட்டால் அடுத்த ஆண்டு அந்த மன்ற , கழக , சங்கங்கள் தொழிற்பட அனுமதி வழங்கப்படமாட்டாது . 
      • அனைத்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சர்வதேச பிரதிநிதிகளும் நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே அதிபரின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் , கல்வி அமைச்சின் கல்வி அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருத்தல் வேண்டும் . 
      • இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்குப் பொருத்தமான விளையாட்டு வீரர்கள் வேறு ஏதாவது காரணத்தினால் குறித்த நாளில் விளையாட்டுக்களில் பங்குபற்ற முடியாவிடில் , அதற்கான காரணமடங்கிய கடிதத்தைப் பொறுப்பாசிரியரிடம் ஒரு கிழமைக்கு முதல் கையளித்தல் வேண்டும் . அவ்வாறு கையளிக்காத மாணவர்கள் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலை சார்பாக விளையாட்டுக்களில் தொடர்ந்து பங்கெடுக்கும் வாய்ப்பு முற்றாகத் தடைசெய்யப்படும் . 
      • விசேட அனுமதி கொடுக்காதவிடத்து , புறக்கிருத்திய செயற்பாடுகள் , விளையாட்டுக்கள் பி.ப 7.00 மணிக்கு நிறைவு செய்யப்படல் வேண்டும் . எக்காரணம் கொண்டும் பி.ப 7 மணிக்குப் பின் பாடசாலை வளாகத்துக்கள் மாணவர்கள் நடமாட முடியாது .
பாடசாலை ஒழுக்காற்று விதிமுறைகள்
      • விதிமுறைகளுக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் உரிய விசாரணையின் பின்னர் பாடசாலையில் இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையின் நிமித்தம் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடைநிறுத்தப்படுவர் . காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார்கள் .

Students

[post_grid id=’1688′]

LINKS

Finance

Library

Publications

School Development Society

OBAS

JHC OBA Jaffna

JHC OBA Colombo

JHC OBA Sydney

JHC OBA UK

JHC OBA Melbourne

JHC OBA Canada

JHC OBA USA

Contact Info

  • Jaffna Hindu College, College Road, Jaffna, Sri Lanka.

  • Telephone021-2222431

  • International 021-2222431

  • email principal@jhc.lk

Copyright © 2021 Jaffna Hindu College

Follow us