Risk Holiday Self – Education Worksheet (2) – 2020

02

நாட்டில் நிலவும் இடர் காரணமாக ஏற்பட்ட விடுமுறைக்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நமது தமிழ் மாணவர்கள் அனைவரும் தமது சுயகற்றலை மேம்படுத்திடும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களின் தயாரிப்பில் தரம் 6 தொடக்கம் தரம் 13 (2021) உயர்தரம் வரையிலான அனைத்துத் தரங்களிற்குமான பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் இரண்டாம் தவணைக்கான  செயலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும்.

அதிபரின்  செய்திக்கு இங்கே அழுத்துங்கள்


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

  • மாணவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தரங்களிற்கான செயலட்டைகளை பதிவிறக்கம் செய்து அவற்றினை பூரணப்படுத்த வேண்டும்.
  • இந்த செயலட்டைகள் வழங்கப்பட்டுள்ளமையானது உங்கள் சுயகற்றலை மேற்படுத்துவதற்கே என்பதைக் கருத்திற் கொண்டு சுயகற்றலில் ஈடுபடுவதன் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது செயலட்டைகளை விடைத்தாள்களில் (A4 Paper/ Foolscap Paper) பூரணப்படுத்தி அவரவர் வகுப்பாசிரியர்களிடம் கோவையாக (file) ஒப்படைக்கப்படல் வேண்டும்.
  • இச் செயலட்டைகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர் தேர்ச்சியறிக்கைகளில் பதியப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  • மாணவர்கள் இந்த செயலட்டைகளினை வன்பிரதி செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
  • இணையவழி மூலம் செயலட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாத மாணவர்கள் அவரவர் வகுப்பாசிரியர்களை அணுக முடியும்.
  • உங்கள் அனைவருடனும் உங்கள் வகுப்பாசிரியர்கள் தொடர்பினை மேற்கொண்டு செயலட்டைகள் உங்களுக்குக் கிடைப்பதனை உறுதி செய்து கொள்வர்.
  • இணையத்தை அணுகுவதற்கு வசதியற்ற மாணவர்களுக்கு செயலட்டைகளை வீடுகளுக்கு நேரடியாக கொண்டு வந்து ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
  • இவை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் நிலவின் அவரவர் வகுப்பாசிரியர்கள் மற்றும் பகுதித் தலைவர்களை அணுகுங்கள்.
  • வேறேதேனும் அவசரத் தொடர்புகளிற்கு :  jaffnahinduinfo@gmail.com