Google

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் யாழ் இந்து 17 வயதுப்பிரிவு கிரிக்கட் அணி Division III இல் இருந்து Division II இற்கு முன்னேற்றம்.

Written on:December 1, 2012
Comments are closed

இன்றைய தினம் (01/12/2012)  நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டி அனுராதபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி காலி ராஜபக்ஸ மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணியினர் முதலில் காலி ராஜபக்ஸ மகா வித்தியாலய அணியை துடுப்பெடுத்தாட பணித்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் 40.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்ங்களை மட்டும் பெற்றனர்.

இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் காலி ராஜபக்ஸ மகா வித்தியாலயம்  சார்பில் :

ரஜித் பியந்த – 23
லகிரு சதுரங்க – 14 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

சாரங்கன் – 4
சிந்துஜன் – 3
மதுசன் – 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

பின் 129 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  யாழ் இந்துக் கல்லூரி அணி 39.5 பந்துப் பரிமாற்றங்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுவெற்றி இலக்கை அடைந்தது.


துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

கல்கோவன் – 39
சிந்துஜன் – 28
சிவஜனன் – 15 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில்  காலி ராஜபக்ஸ மகா வித்தியாலயம்  சார்பில் :

ரஜித் பியந்த – 3
நடுன் சமீர – 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இவ் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி Division III இல் இருந்து Division II இற்கு முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.