Google

மானிப்பாய் இந்துக் கல்லூரியை 4 இலக்குகளால் வெற்றி கொண்டதன் மூலம் யாழ் இந்து 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது…

Written on:November 21, 2012
Comments are closed

இன்றைய தினம் (21/11/2012) நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து
விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 23.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி  சார்பில் :
லக்ஸ்சானந் – 19
திவாகரன் – 14 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
சங்கீதன் – 3
கலைச்செல்வன் – 2 இலக்குகளை பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 24 பந்துப் பரிமாற்றங்களில்அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
விதுசன் – 9
சங்கீதன் – 6 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் :
திவாகரன் – 6
கஜீதன் – 3 இலக்குகளை பெற்றனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது இனிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி  20.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி  சார்பில் :
லக்ஸ்சானந் – 17
அலன்ராஜ் – 12 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
கலைச்செல்வன் – 5
சிறீராம் – 2 இலக்குகளை பெற்றனர்.

ஏற்கனவே முதல் இனிங்ஸில் 5 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த  யாழ் இந்து அணிக்கு இரண்டாவது இனிங்ஸில் வெற்றியிலக்காக 57 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 20.4 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை  மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
விதுசன் -12
கிரிதகணேஸ் -10* ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் :
திவாகரன் – 3
கஜீதன் – 3 இலக்குகளை பெற்றனர்.

இதனால் யாழ் இந்து  13 வயது பிரிவு கிரிக்கட் அணி தனது இரண்டாவது போட்டியில் 4 இலக்குகளால் வெற்றியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Sorry, the comment form is closed at this time.