Google

இன்று நடைபெற்ற கன்னிப் போட்டியில் மகாஜனா கல்லூரியை 9 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது யாழ் இந்து 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…

Written on:November 17, 2012
Comments are closed

இன்றைய தினம் (17/11/2012) நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதற்போட்டி  மகாஜனா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து 
விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணி முதலில் களத்தடுப்பை செய்ய தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் மகாஜனா கல்லூரி 35.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மகாஜனா கல்லூரி  சார்பில் :
தனுஸ்ரன் – 21
சுஜீபன் – 13 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
சிறீராம் – 5
கலைச்செல்வன் – 3
ஜனுசன் – 2  விக்கெட்டுக்களை பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 45.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
சிறீராம் – 23
கிரிதகணேஸ் -21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் மகாஜனா கல்லூரி சார்பில் :
சர்மிலன் – 4
கஜசுதன் – 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது இனிங்ஸில் மகாஜனா கல்லூரி 14.5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மகாஜனா கல்லூரி  சார்பில் :
பிரதீஸ் – 19

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
ஜனுசன் – 6
கோபிராம் – 2
சிறீராம் – 1 விக்கெட்டுக்களை பெற்றனர்.

ஏற்கனவே முதல் இனிங்ஸில் 11 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த யாழ் இந்து அணிக்கு இரண்டாவது இனிங்ஸில் வெற்றியிலக்காக 38 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 43 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

ஜனுசன் – 18*
விதுசன் -12
கிரிதகணேஸ் -7* ஓட்டங்களை பெற்றனர்.

இதனால் யாழ் இந்து  13 வயது பிரிவு கிரிக்கட் அணி தனது முதலாவது போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியடைந்தது.

Sorry, the comment form is closed at this time.