Google

யாழ் இந்துவில் நடைபெற்ற தேசிய மரநடுகை நிகழ்வு…

Written on:November 15, 2012
Comments are closed

”தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்ட” நிகழ்வானது இன்றைய தினம் காலை யாழ் இந்துக் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் வீ.கணேசராசா அவர்களால் தேசியக் கொடியும், பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்களால் பாடசாலைக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன்  மாணவர்களால் சூழல் கீதமும் இசைக்கப்பட்டது.
இதனை தொர்ந்து அதிபர் அவர்களினால் ”வனப்பாதுகாப்பு மற்றும் மரநடுகை” பற்றிய உரை இடம்பெற்றது. அதன் பின் அவரினால் பாடசாலை வளாகத்தினுள்ளே மரக் கன்றும் நாட்டப்பட்டது.அத்துடன் இந் நிகழ்வில்பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன், உப அதிபர் திருமதி.சுரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





Sorry, the comment form is closed at this time.