Google

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவின் மைந்தன் செந்தூரன் பங்கேற்பு..

Written on:November 7, 2012
Comments are closed

அவுஸ்ரேலியா அல்பேட் பாக்கில் நடைபெறவுள்ள தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இ.செந்தூரன் உயரம் பாய்தல் நிகழ்வில் பங்கேற்கின்றார். இவரது நிகழ்வு எதிர்வரும் 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியா நேரப்படி பி.ப 2.30 மணிக்கு அல்பேட் பாக்கில் நடைபெறவுள்ளது.

இவர் கனிஸ்ட மெய்வல்லுநர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 192 M உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடன் எட்டு வீரர்கள் இலங்கையிலிருந்து சென்றுள்ளார்கள் என்பதுடன் வடக்கில் இருந்து செல்லும் ஒரே ஒரு வீரர் செந்தூரன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றிப் பயணத்திற்கு கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராஜா, விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர் திரு.பா.ஜெயரட்ணராஜா, மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் திரு.K..சுவாமிநாதன், சிறப்பு பயிற்றுநர் திரு.செ.ரமணன், மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் , ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Sorry, the comment form is closed at this time.