Google

கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட தேசியமட்ட விவாதப் போட்டியில் யாழ் இந்துவுக்கு முதலிடம்!

Written on:November 3, 2012
Comments are closed

அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்சங்கத்தால் நடாத்தப்பட் டநாடளாவிய விவாதச் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப்பெற்றுக்கொண்டனர்.
மேற்படி போட்டியானது கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிச் சுற்றில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியுடனான பரபரப்பான போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணியை தோற்கடித்து  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
ஆசிரியர் தி.சிவகுமாரனின் உதவியுடன்,கல்லூரியின் ஆசிரியர்களான திரு.அ.நவநீதகிருஸ்ணன், திரு.வா.சிவராசா ஆகியோரின் வழிகாட்டலில்,கல்லூரியின் முன்னணிப் பேச்சாளர்களான,
செல்வன். ஜீவரட்ணராஜா ஷஜீவன் (தலைவர்)
செல்வன். ஸ்ரீஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரீ (பிரதித்தலைவர்)
செல்வன.; அமிர்தலிங்கம் திருமருகன்
செல்வன். சத்தியசீலன் மயுரேசன்

என்போர் களமிறக்கப்பட்டனர். மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பதிவுசெய்த இவர்கள் 91 பாடசாலைகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் முதலிடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது!
மேலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிஅணி கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்மொழித்தினப் போட்டிகளில் மாகாணமட்டத்தில் முதலிடங்களும்,தேசியமட்டத்தில் பலசாதனைகளையும் புரிந்துள்ளமை நினைவுகூரத்தக்கது.

 

 

 

Sorry, the comment form is closed at this time.