Google

சர்வதேச ரீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு இரண்டு பதக்கங்கள்….

Written on:November 6, 2012
Comments are closed

அண்மையில் சர்வதேச கனிஷ்ட கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் லக்னோ எனும் இடத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக விஞ்ஞான பிரிவில் 17 மாணவர்கள் கொண்ட அணி பங்குபற்றி இருந்தது. இவ் அணியானது சர்வதேச ரீதியில் 3ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது. இவ் அணியில் யாழ். இந்துக் கல்லூரியிலிருந்து பங்கு பற்றிய செல்வன் அ.அபிநந்நதன் வெள்ளிப் பதக்கத்தினையும், செல்வன்.இ.இளங்கீதன் வெண்கலப் பதக்தையும் பெற்று இலங்கை அணிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் குறிப்பாக யாழ் இந்துக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

Sorry, the comment form is closed at this time.