Google

கால் இறுதிப் போட்டியில் கின்னியா மத்திய கல்லூரியை வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…

Written on:October 19, 2012
Comments are closed

அண்மையில் நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் கால் இறுதிப் போட்டி திருகோணமலை கின்னியா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி கின்னியா மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணியினர் முதலில் கின்னியா மத்திய கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட பணித்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்ங்களை மட்டும் பெற்றனர்.

இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் கின்னியா மத்திய கல்லூரி  சார்பில் :

அஸ்லம் -17
அஹமட் – 15 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

சிந்துஜன் – 8 விக்கெட்டுக்கள்
மதுசன் – 1விக்கெட்
கல்கோகன் – 1 விக்கெட்

பின் 87 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  யாழ் இந்துக் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

சிந்துஜன் – 19
பிருந்தாபன் – 14
வைகரன் – 12 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் கின்னியா மத்திய கல்லூரி  சார்பில் :

ரியாஸ் – 3
அஸ்லம் – 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

Sorry, the comment form is closed at this time.