Google

தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு பதக்கங்கள்…

Written on:October 18, 2012
Comments are closed

அண்மையில்  அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அம்பாந்தோட்ட பிலியந்தலவிலுள்ள D.A.ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ் இந்து சார்பாக பங்குபற்றிய வீரர்களில் வ.ஜஸ்மினன் நீளம் பாய்தலில் 7.11 M தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினையும் வர்ண விருதினையும் பெற்றுக் கொண்டார்.

அதே போன்று உயரம் பாய்தலில் இ.செந்துாரன் 1.86 M உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினையும் வர்ண விருதினையும் பெற்றுக் கொண்டார்.


இவர்களுடைய வெற்றிக்கு கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா, விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.பா.ஜெயரட்ணராஜா, மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் திரு.K..சுவாமிநாதன், சிறப்பு பயிற்றுநர் திரு.செ.ரமணன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.