Google

ஈரானில் நடைபெறவுள்ள சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்து மாணவன்…

Written on:October 18, 2012
Comments are closed

இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடாத்திய தரம் 10 மாணவர்களுக்கான 9ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன்  பத்மநாதன் மேஷிகன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இவர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை அணி சார்பில் இப் போட்டியில் பங்குபற்றும் தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல்வாரம் ஈரான் தெஹரான் மாநகரில் நடைபெறவூள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றவுள்ளார். இவர்களுடன் இலங்கை சார்பாக செல்லும் அணிக்கு தலைமை தாங்குவதற்கு எமது பாடசாலைச் சேர்ந்த ஆசிரியர் சொக்கலிங்கம் ஹரிசங்கர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் போட்டியில் 50ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 300 ற்கு அதிகமான மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில்  இலங்கை சார்பாக யாழ் இந்துவின் இரு மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


 

Sorry, the comment form is closed at this time.