Google

யாழ் இந்துவின் மைதான விஸ்தரிப்புக்காக கனடா வாழ் பழைய மாணவர்களினால் 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரை பரப்பு காணி கொள்வனவு…

Written on:October 1, 2012
Comments are closed

இன்றைய தினம்(01/10/2012) யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் காலை 8.00 மணியளவில் மைதானத்துக்கான காணிக் கொள்வனவு தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வினை யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர்கள் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்கள்.

இன்றைய நிகழ்வில் மைதான விஸ்தரிப்புக்காக 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரைப் பரப்பு காணியின் உறுதியினை அதிபர் அவர்கள் காணி உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டதும் அதற்குரிய காசோலையினை பின்னர் அக் காணி உரிமையாளரிடம் கையளித்தார். இந் நிகழ்விற்கு யாழ்ப்பாண பழையமாணவர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர்,உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி என பலரும் கலந்து கொண்டனர். இன்றைய தினம் மைதானத்திற்கென கொள்வனவு செய்யப்பட்டது 8 ஆவது காணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக் காணிக் கொள்வனவுக்கான முழு தொகையினையும் (35 இலட்சம்)  கனடா வாழ் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று அக் கனடா வாழ் பழைய மாணவர்களினால் அடுத்த வருடத்திலும் மைதானத்துக்காக காணி கொள்வனவு செய்யப்பட இருப்பதுடன் அவர்களால் மைதானத்திற்காக 1கோடி ரூபா பெறுமதியான பார்வையாளர் அரங்கும் கட்டிக் கொடுக்கப்பட இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.










Sorry, the comment form is closed at this time.