Google

யாழ் இந்துக் கல்லூரியின் இளசுகள் அணியினால் அறியாமலே குறும்படத்தின் பாடல் வெளியீடு

Written on:September 30, 2012
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வழிகாட்ல் ஆலோசனை சேவைப்பிரிவின் வழிப்படுத்தலின் கீழ் இயங்கும் இளசுகளினால் அறியாமலே குறும்படத்தின் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா நிகழ்வு அண்மையில் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் இறுவட்டினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வழிகாட்லும் ஆலோசனை சேவைப்பிரிவின் ஆசிரியர் நா.கு.மகிழ்ச்சிகரன் சிறுவர்கழகத்தலைவர் ந.சிவகுலன் இப்பாடலின் இசையமைப்பாளர் மதீசன் ஆகியோர் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் ச.நிமலன், பகுதித்தலைவர் ஆர்.திரவியநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இவ்இறுவட்டின் பாடலுக்கான பாடவ்வரிகளினை த.மதீசனும் கவிவரிகளை ஆசிரியர் இல.நிஷாந்தனும் கவிஉரைகளினை சி.மயூரேசனும் மேற்கொண்டுள்ளனர். ஒலிப்பதிவினை கல்லூரின் பழைய மாணவன் சத்தியன் அவர்களும் பாடல் இசையினை மதீசனும் வழிகாட்டலினை ஆசிரியர் நா.கு.மகிழ்ச்சிகரனும் மேற்கொண்டுள்ளனர். பாடலினை ப.விஷ்னுகரன், சி.கோகுலன், திருமதி பாலமுரளி கிறிஸ்னா ஆகியோர் பாடியுள்ளனர்.

இளசுகள் அணியினரால் வெளியடப்படும் மூன்றாவது இறுவட்டாக இது அமைகின்றது. போர் மற்றும் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி வருகின்றன.கற்றல் உபகரணங்கள் உதவிப்பொருட்களாக பல உதவிகள் கிடைத்தம் அன்பும் அரவனைப்பும் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது. அத்தகைய எம் சகோதரர்களை ஏற்றுக்கொள்வதும் உள்ளன்போடு அன்பு செலுத்தி நம்பிக்கையீட்டுபவர்களாகவும் நாம் உதவவேண்டும் என்பதினை வலியுறுத்தி இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.