Google

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி தின விழாவில் பிரதம விருந்தினராக தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் பங்கேற்பு…

Written on:September 28, 2012
Comments are closed

இன்றைய தினம் (28/09/2012) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய தமிழ் மொழி தினம் குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவருமான தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் சிவஞான வைரவப் பெருமானின் ஆசிகளுடன் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக தேவாரமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் பின் தமிழ் மொழித் தின வாழ்த்தும் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் வரவேற்புரையை செல்வன் சிவஸ்கந்தஸ்ரீ அவர்கள் நகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து இன்றைய விழாவின் தலைவர் பிரகதீஸ் அவர்கள் தனதுரையான தலைமையுரையை நிகழ்த்தினார். அதன் பின் கல்லூரி முதல்வர் திரு. வீ. கணேசராசா இன்றைய தமிழ் தின விழாவுக்குரிய ஆசியுரையை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் பின்னர் இன்றைய விழாவின் பிரதம விருந்தினர் தமிழருவி சிவகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்தினார். அவர் தனதுரையிலே தமிழின் பெருமைகளைப் பற்றி மிகவும் அருமையாக கூறியிருந்தார். இதனை அடுத்து கோட்டம், வலயம், மாவட்டம்,மாகாணம்,தேசியம் என்பனவற்றில் பங்குபற்றி பதக்கங்கள் பெற்ற மாணவர்கள் அனைவரும் பரிசில் வழங்கும் வைபவத்தில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களுடைய காத்தவராஜன் சிந்து நடைக் கூத்தும், பந்து நடனமும் இடம் பெற்றது. பின் இறுதி நிகழ்வான நன்றியுரையினை தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.

 

Sorry, the comment form is closed at this time.