Google

283 ஓட்டங்களால் வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணியை வெற்றி கொண்டது யாழ் இந்து 15 வயது கிரிக்கட் அணி…

Written on:September 17, 2012
Comments are closed

இன்றைய தினம் (17/09/2012) 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணியை எதிர்த்து விளையாடியது. யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி  அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 384 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்து துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

M.துவாரகன் – 150 (100 balls) (27 fours, 1 six)
உதயன் – 66 (9 fours, 1 six)
பானுகோபன் – 30 ஓட்டங்களைப் பெற்றனர்.


பந்து வீச்சில் வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணி சார்பாக :

பிரியசாட் – 3
திஸ்ஸ பன்டார – 2 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

பின் 385 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணி 21.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதனால் யாழ் இந்து 283 ஓட்டங்களினால் இப் போட்டியில் வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில்  வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை அணி  சார்பில் :

மலின்ட – 16
திஸ்ஸ – 12 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில்  யாழ் இந்துக் கல்லூரி  சார்பில் :

ராகுலன் – 4 விக்கெட்டுக்கள்
நிசோதன் – 2 விக்கெட்டுக்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.