Google

கொழும்பு Nondescripts Cricket Club (N.C.C) உடன் நடைபெற்ற 15 வயதுப் பிரிவு நட்புறவு கிரிக்கட் போட்டியில் யாழ் இந்து 61 ஓட்டங்களால் வெற்றி…

Written on:September 15, 2012
Comments are closed

இன்றைய தினம் (15/09/2012)  15 வயதுப் பிரிவிற்குரிய நட்புறவு கிரிக்கட்போட்டியொன்று கொழும்பு Nondescripts Cricket Club (N.C.C) இன் 15 வயதுப் பிரிவினருடன் நடைபெற்றது.
இவ் N.C.C Academy ஆனது கொழும்பின் பிரபல Coach ஆன Lionel Mendis என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.இவர் இந் நிறுவனத்தை ஆரம்பித்து இந்த வருடத்துடன் 30 ஆண்டுகளை பூர்த்தியாகிவிட்டது. எனவே 30 ஆண்டு கால  பூர்த்தியினை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளுடன் கிரிக்கட் போட்டிகளை ஒழுங்கமைத்து விளையாடி வருகின்றார். இவரது Nondescripts Cricket Club (N.C.C) இல் இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்களான Russel Arnold, Upul Chandana, Aravinda de Silva, Avishka Gunawardene, Lasith Malinga, Naveed Nawaz, Ravindra Pushpakumara, Kumar Sangakkara, Upul Tharanga, Hashan Tillakaratne, Gamini Wickremasinghe, Dinesh Chandimal போன்ற பலர் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் இன்றைய தினம் 25 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட போட்டி ஒன்று ஸ்ரான்லி கல்லூரி மைதாத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 25 ஓவர்கள் நிறைவில்168ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்தது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

உதயன் – 88* (13 fours, 2sixes)
கஜானந் – 41*(6 fours)
நிசோதன் – 16 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் Nondescripts Cricket Club சார்பில் :

Senal  – 1
Yasin – 1 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

பின் 169 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய Nondescripts Cricket Club 21.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதனால் யாழ் இந்து 61 ஓட்டங்களினால் இப் போட்டியில் வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில்  Nondescripts Cricket Club சார்பில் :

Bimsara – 33
Humaid – 21
Sandeep – 11 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில்  யாழ் இந்துக் கல்லூரி  சார்பில் :

ராகுலன் – 4 விக்கெட்டுக்கள்
பானுகோபன் – 2 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

Sorry, the comment form is closed at this time.