Google

மானிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி மூன்றாம் சுற்றுக்கு தெரிவு…

Written on:September 14, 2012
Comments are closed

இன்றைய தினம் (14/09/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் 33.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்ங்களைப் பெற்றனர்.

இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி  சார்பில் :
குகபிரசாத் :35
பிரதீபன், திலக்ஸன் – 21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

மதுசன் – 3 விக்கெட்டுகள்
சிந்துஜன் – 2 விக்கெட்டுக்கள்
வைகரன் –  2 விக்கெட்டுக்கள்
பின் 126 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  யாழ் இந்துக் கல்லூரி அணி 9.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில்  யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :

மதுசன் – 83* (26 Balls) (2 sixes, 15 fours)
சஜீகன் -13*ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் :

பிரதீபன் – 2 விக்கெட்டுகள்

தற்போது நடைபெற்று முடிந்த இரண்டாம் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் யாழ் இந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்குள் செல்லவுள்ளது.

Sorry, the comment form is closed at this time.