Google

இரண்டாம் சுற்றில் ஹாட்லி கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி…

Written on:September 12, 2012
Comments are closed

இன்றைய தினம் (12/09/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய  இரண்டாம் சுற்று கிரிக்கட் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஹாட்லி கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் அடிப்படையில் யாழ் இந்து 39 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பெடுத்தாட்டத்தை நிறுத்திக் கொண்டது.


இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :
மதுசன் – 60
சஜீகன் – 48
நிலோஜன் – 30 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஹாட்லி கல்லூரி  சார்பில் :

அருள்ராஜ் – 3 விக்கெட்டுகள்
நிரோஜன் – 3 விக்கெட்டுக்கள்

பின் 201 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹாட்லி கல்லூரி 30.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது

துடுப்பாட்டத்தில் ஹாட்லி கல்லூரி  சார்பில் :

அனந்தசஜன் – 39
சஜீவன் -33 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ் இந்து சார்பில் :

மதுசன் – 4 விக்கெட்டுகள்
சிந்துஜன்  – 3 விக்கெட்டுகள்

இப் போட்டியில் யாழ் இந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாட்லி கல்லூரியை  வெற்றி கொண்டது.

 

Sorry, the comment form is closed at this time.