Google

யாழ் இந்துக் கல்லூரிக்கு மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் ஐந்து தங்கம் உட்பட பதினொரு பதக்கங்கள்

Written on:July 29, 2012
Comments are closed

நடைபெற்று முடிந்த மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி ஐந்து தங்கம் மூன்று வெள்ளி மூன்று வெண்கலப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளது.
இவ் வகையில் பதினைந்து வயதுப்பிரிவில் தேவதாஸ் விதுசன் குண்டு போடுதலில் முதலாம் இடத்தினையும் சட்டவேலி நிகழ்வில் இரண்டாம் இடத்தையும் 400M ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.


பதினேழு வயதுப் பிரிவில் இரத்தினசிங்கம் செந்தூரன் உயரம் பாய்தல் நிகழ்வில் தங்கப்பதக்கத்தினையும் இராசசிறி விதுசன் தட்டெறிதல் நிகழ்வில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
பத்தொன்பது வயதுப் பிரிவில் வசீகரன் ஜஸ்மினன் நீளம் பாய்தல் நிகழ்வில் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும் முப்பாய்ச்சல் நிகழ்வில் மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
கந்தசாமி தனுசன் உயரம் பாய்தல் நிகழ்வில் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
மனோகரன் டக்சன் முப்பாய்ச்சல் நிகழ்வில் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
இருபத்தியொரு வயதுக்குட்பட்ட பிரிவில் தேவகுமாரன் தட்டெறிதல் நிகழ்வில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.
இவர்களில் பதினேழு வயதுப் பிரிவில் இரத்தினசிங்கம் செந்தூரன் உயரம் பாய்தல் நிகழ்வில் சாதனை நிலைநாட்டியுள்ளார். அதே போல் பத்தொன்பது வயதுப் பிரிவில் கந்தசாமி தனுசன் உயரம் பாய்தல் நிகழ்வில் புதிய சாதனையினை நிலை நாட்டியுள்ளார். பத்தொன்பது வயதுப் பிரிவினருக்கான சிறந்த மைதான வீரனாக வசீகரன் ஜஸ்மினன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களின் வெற்றிக்கு பாடசாலை அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் மேற்பார்வையில் பயிற்சியினையும் பயிற்சி நெறிப்படுத்தலினையும் மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் பயிற்றுனர் செ.றமணன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.