Google

ஸ்ரான்லி கல்லூரியுடனான கிரிக்கட் போட்டியில் 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யாழ் இந்து 17 வயது கிரிக்கட் அணி…

Written on:July 13, 2012
Comments are closed

இன்றைய தினம் (13/07/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் போட்டியின் மூன்றாம் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஸ்ரான்லி கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே யாழ் இந்துவின் துடுப்பாட்டம் அதிரடியாக இருந்தது. இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 50 ஓவர்கள் நிறைவில் 426 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்து தனது துடுப்பெடுத்தாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :


சஜீகன் – 122 (104 பந்துக்கள்)
மதுசன் – 70 (36 பந்துக்கள்)
கல்கோவன் – 54 (50 பந்துக்கள்) ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்ரான்லி கல்லூரி சார்பில் :

பிரசாந் – 4 விக்கெட்டுகள்
தமிழெலிழன் – 1 விக்கெட்

பின் 427 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   ஜூனியன் கல்லூரி 29.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஸ்ரானிலி கல்லூரி சார்பில் :

பிரசாந் – 46
விசாகன் -22 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ் இந்து சார்பில் :

மதுசன் – 5 விக்கெட்டுகள்
சாரங்கன் – 2 விக்கெட்டுகள்
குகானந் – 2 விக்கெட்டுகள்

இப் போட்டியில் யாழ் இந்து 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  ஸ்ரான்லி கல்லூரியை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.