Google

15 வயதுப்பிரிவிற்குட்பட்ட கிரிக்கட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து…

Written on:July 10, 2012
Comments are closed

இன்றைய தினம் (10/07/2012) ஆரம்பமாகிய 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதல் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் மத்திய கல்லூரி 47 ஓவர்கள் நிறைவில் 178 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் :

தனுசன் – 40
கோமேதகன் – 37 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ் இந்து சார்பில் :

ஜிதுர்சனன் -2
பானுகோபன் -2
நிசோதன் – 2 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 179ஓட்டங்களைப் பெற்று இப் போட்டியில் வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

நிசோதன் – 59
கஜானந்த் – 56 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில்  மத்திய கல்லூரி கல்லூரி  சார்பில் :

தனுசன் – 2
அலன்ராஜ் – 1  விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

அடுத்து இப் போட்டித் தொடரில் யாழ் இந்து,  யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியுடன் மோதவுள்ளது.

Sorry, the comment form is closed at this time.