Google

அண்மைய பௌதீகவளச் செயற்திட்டம் -2017

Written on:April 24, 2017
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்
அண்மைய பௌதீகவளச் செயற்திட்டம்

125ஆவது ஆண்டு விழாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் வருகைதந்த போது உறுதியளிததமைக்கிணங்க

 1.7 மில்லியன் ரூபா நவீன மலசலகூட தொகுதி
 8 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் திருத்த வேலைகள்
 20.5 மில்லியன் ரூபா பெறுமதியான குமாரசாமி மண்டப திருத்தம்
 37 மில்லியன் ரூபா பெறுமதியான 3மாடி கட்டடம்

அண்மையயில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழ் 90 x 25 அடி மூன்று மாடிக்கட்டடம்

மேற்படி வேலைத்திட்டங்கள் எமது கல்லூரிக்கு பழையமாணவனும் முன்னைநாள் பாரளுமன்ற உறுப்பினருமான திரு.ஆர்.ஸ்ரீரங்கா அவர்களின் பெரு முயற்சியினால் மத்திய கல்வி அமைச்சின் நிதியுதவியின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

 5.5 மில்லியன் ரூபா விளையாட்டு மைதானத்திற்கு இரும்புகம்பி வேலியிடல்
 1.5 மில்லியன் ரூபா பற்சிகிச்சை நிலைய திருத்தம்
என்பன கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ வே.இராதகிருஷ்ணன் அவர்கள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளன.

 1.2 மில்லியன் ரூபா மூலம் கூடைப்பந்தாட்ட திடல் காப்பெற்இட்டு மெருகூட்டுதல்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் பழையமாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஈ.சரவணபவன் அவர்களின் நிதியுதவியில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் எமக்கு கிடைப்பதற்கு காரணமாகவிருந்த கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ வே.இராதகிருஷ்ணனன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஸ்ரீரங்கா, கல்வி அமைச்சின் கட்டட வேலைகள் பணிப்பாளர் டாக்டர் U.G.Y. அபயசுந்தர, கொழும்பு பழைய மாணவர் சங்கம், யாழப்பாணம் பழைய மாணவர் சங்கம், வடமாகாண கல்வி அமைச்சு ஆகியோருக்கு எனது மனமார்நத நன்றிகளை கல்லூரி அதிபர் என்ற வகையில் தெரிவிக்கின்றேன்.

இதைதொடர்ந்து இன்னும் பல வேலைத்திட்டங்கள் எம்மால் முன்மொழியப்பட்டுள்ளன.

 நிர்வாக கட்டட தொகுதி
 விளையாட்டரங்கம் (கல்லூரி வீதிக்கு மேலாக மே;பாலம் நிறுவுதல்)
 விளையாட்டு மைதன விரிவாக்கம் – கொழும்பு பழைய மாணவர் சங்கமும்         நம்பிக்கை நிதியமும் இணைந்து 5.25 மில்லியன் பெறுமதியில்                                காணியினை கொள்வனவு செய்துள்ளனர்.
 கல்லூரி பிரதான பகுதிக்கும் குமாரசுவாமி மண்டபத்திற்கும் மேம்பாலம்            இடல்
 அதிபர் விடுதியையும், வகுப்பறையையும் கொண்ட கட்டட தொகுதி
 உள்ளக விளையாட்டரங்கு
என்பன நிர்மானிப்பதற்காக செயற்திட்டங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இத் தருணத்தில் தெரிவிக்கின்றேன்.

Sorry, the comment form is closed at this time.