Google

433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜூனியன் கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து 17 வயது கிரிக்கட் அணி…

Written on:July 9, 2012
Comments are closed

இன்றைய தினம் (09/07/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் போட்டியின் இரண்டாம் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஜூனியன் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜூனியன் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 50 ஓவர்கள் நிறைவில் 491 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை மாத்திரம் இழந்து தனது துடுப்பெடுத்தாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

கல்கோவன் – 115 (77 பந்துக்கள்)
றுக்ஸ்மன் – 106 (66 பந்துக்கள்)
சஜீகன் – 89 (61 பந்துக்கள்)
பிருந்தாபன் – 86* (63 பந்துக்கள்)  ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஜூனியன் கல்லூரி சார்பில் :

லனுசன் – 4 விக்கெட்டுகள்
ஜேம்சன் – 1 விக்கெட்

பின் 492 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   ஜூனியன் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஜூனியன் கல்லூரி சார்பில் :

நிதர்சன் – 17
அனிஸ்ரன் -14 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ் இந்து சார்பில் :

சாரங்கன் – 3 விக்கெட்டுகள்
சிந்துஜன் -2 விக்கெட்டுகள்
வைகரன் – 2விக்கெட்டுகள்

இப் போட்டியில் யாழ் இந்து 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  ஜூனியன் கல்லூரியை வெற்றி கொண்டது இப் போட்டியின் மிகவும் முக்கியமான விடயமாகும்.

Sorry, the comment form is closed at this time.