Google

17 வயதுப் பிரிவிற்குட்பட்ட கிரிக்கட் போட்டியில் மாகாஜனா கல்லூரிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது யாழ் இந்து

Written on:July 7, 2012
Comments are closed

இன்றைய தினம் (07/07/2012) ஆரம்பமாகிய 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் போட்டியின் முதல் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மகாஜனா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் 46 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் மகாஜனா கல்லூரி சார்பில் :

ஜனந்தன் – 41
மயுரன் – 33
ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில்  யாழ் இந்து சார்பில் :

கல்கோவன் -5
சிந்துஜன் -3 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.

பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 34 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று இப் போட்டியில் வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

மதுசன் – 85 (34 பந்துக்கள்)
சஜீகன் – 41
பிருந்தாபன் – 35 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில்  மகாஜனா கல்லூரி சார்பில் :

கபிலன் – 3
மயுரன் – 1

இப் போட்டியில் அரைச் சதம் பெற்ற மதுசன் 17 பந்துக்களில் மிக விரைவாக 51 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


Sorry, the comment form is closed at this time.