Google

சர்வதேச ரீதியில் நடக்கவிருக்கின்ற Junior National Mathematics & Science Olympiad போட்டியில் யாழ் இந்து மாணவர்கள்…

Written on:July 7, 2012
Comments are closed

அண்மையில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான Junior National Mathematics & Science Olympiad போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக பங்குபற்றிய செல்வன்.இ.இளங்கீதன், செல்வன்.அ.அபிநந்தன் ஆகிய இரு மாணவர்களும் தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கங்களை பெற்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

தேசிய ரீதியில் நடைபெற்ற இப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக 18 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு  இவர்கள் அனைவரும் வருகின்ற October மாதம் 27 ஆம் திகதி இந்தியாவின் Lacknow நகரில் நடக்கவிருக்கின்ற 9th International Maths & Science Olympiad போட்டியில் பங்குபற்றவிருக்கின்றார்கள். அந்த வகையில் எமது கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களும் சர்வதேச ரீதியாக நடைபெறும் இப் போட்டியில் பங்குபற்ற இருக்கின்றமை எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயமாகும்.





Sorry, the comment form is closed at this time.