Google

சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு-2016

Written on:September 19, 2016
Comments are closed

pr201யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 19.09.2016 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், இலங்கையின் தலைமை நீதியரசருமாகிய க.ஸ்ரீபவன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜெயந்தி ஸ்ரீபவன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் சபாலிங்கம் அரங்கில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரம் இடம்பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார். அதன் பின்  லண்டன் வாழ் பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்படுகின்ற PERSONAL PROFILE DEVELOPMENT (PPD) எனும் திட்டத்தை இன்றைய விருந்தினர்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆங்கிலப் பேச்சும், தமிழ் பேச்சும் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2015ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சர்வதேச, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், விளையாட்டு வீரர்களுக்கு வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

pr001

pr004

pr015

pr017

pr031

pr033

pr035

pr040

pr041

pr065

pr068

pr071

pr072

pr074

pr075

pr078

pr087

pr092

pr098

pr100

pr102

pr103

pr105

pr106

pr108

pr115

pr116

pr118

pr123

pr130

pr131

pr137

pr151

pr152

pr153

pr157

pr160

pr165

pr174

pr175

pr176

pr177

pr179

pr186

pr187

pr192 pr201 pr202 pr217 pr239q006q008q014q017q019q022q028q035q039q049q051

 

Sorry, the comment form is closed at this time.