Google

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யாழ் இந்துவில் கௌரவம்…

Written on:September 14, 2016
Comments are closed

na080அண்மையில் கண்டி பிலிமத்தலாவ ஸ்ரீ திரானந்தக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்டப் பளுதூக்கல் போட்டியில் எமது கல்லூரி ஒரு தங்கம்,
3 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை பெற்றது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவிப்பாளருக்கும்  பொறுப்பாசிரியர்களுக்கும் இன்றைய தினம் மகத்தான கௌரவிப்பு எமது கல்லூரியில் அளிக்கப்பட்டது.

இன்றைய தினம் அனைவரும்  கஸ்தூரியார் வீதிச்சுற்று வட்டத்தில் இருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

இப் போட்டிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த முன்னாள் ஆசிரியர் திருமாறன் அவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களாக இருந்த சண்முகராஜா மற்றும் ரவீந்திரன் ஆகியோருக்கும்  கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம் :

17 வயத்துக்குட்பட்ட பிரிவு

  1. வி. அபிநயன் (56kg பிரிவு) – தங்கப்பதக்கம்

  2. ஜெ. திர்சாத் (45kg பிரிவு) – வெள்ளிப்பதக்கம்

  3. இ. பிரகலாதன் (94kg பிரிவு) – வெள்ளிப்பதக்கம்

  4. சி. சாருஜன் (94kgஇற்கு மேற்பட்ட பிரிவு) – வெள்ளிப்பதக்கம்

  5. த. மலரவன் (94kg பிரிவு) – வெண்கலப்பதக்கம்

  6. அ. ஸ்ரீபதி அதிகாரம் (77kg பிரிவு) – வெண்கலப்பதக்கம்

20 வயத்துக்குட்பட்ட பிரிவு

  1. சு. மைத்திரேயன் சர்மா (105kgஇற்கு மேற்பட்ட பிரிவு) – வெண்கலப்பதக்கம்

  2. சி. மிதுன் (85kg பிரிவு) – வெண்கலப்பதக்கம்

  3. க. திஷாந் (94  பிரிவு) – வெண்கலப்பதக்கம்

na010 na012 na019 na048 na049 na051 na052 na054 na056 na058 na061 na063 na075 na080

Sorry, the comment form is closed at this time.