Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் – 2016

Written on:July 4, 2016
Comments are closed

re115

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இவ்வருட தமிழ் மொழித் தின விழாவானது 04/07/2016 (திங்கட்கிழமை) அன்று தமிழ்ச்சங்கத்தினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

முதன் நிகழ்வாக பிரதம விருந்தினர் உட்பட ஏனைய விருந்தினர்கள் இன்னிய வாத்தியங்கள் இசைக்க ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம் பெற்றது. அதனையடுத்து வரவேற்புரை இடம்பெற்றது. பின் தலைமையுரையினை விழாத்தலைவர் செல்வன்.சி.விஷாகனன் நிகழ்த்தினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வரின் உரை,தமிழ்ச்சங்க பொறுப்பாசிரியரின் உரையும் இடம் பெற்றன.

பின்னர் பிரதம விருந்தினர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களது பிரதம விருந்தினர் உரையும் இடம் பெற்றது.

தொடர் நிகழ்வாக,இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு பிரதி அதிபர் திரு.சதா.நிமலன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதன் பின், கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

அத்ததுடன் இம் மாதம் ஓய்வு பெறவுள்ள கல்லூரியின் தமிழ் ஆசானும் எமது கல்லூரி விவாதிகளை உருவாக்கி வளர்த்தெடுத்தவருமாகிய திரு.வ.சிவராஜா அவர்களை பாராட்டி கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

பின்னர்,பிரதம விருந்தினரால் கோட்ட மட்ட, வலய மட்ட, மாகாண மட்ட, தேசிய மட்ட தமிழ்த்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன் பின்னர் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக, குழு இசையும் அதனை தொடர்ந்து நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, பேச்சு, நாடகம் ஆகிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இறுதியாக, நன்றியுரையுடனும் கல்லூரி கீதத்துடனும் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.

re003 re004 re005 re023 re024 re025 re027 re029 re031 re032 re034 re035 re037 re041 re042 re044 re046 re047 re049 re050 re051 re054 re057 re062 re063 re064 re065 re066 re067 re069 re070 re071 re072 re080 re086 re087 re088 re089 re090 re093 re094 re103 re106 re112 re115 re116 re118 re119 re120 re121 re126 re131 re136 re139 re141 re144 re145 re146 re149 re152 re153 re156 re160 re168 re170 re174 re179 re180 re184 re185 (2) re185 (3) re186 re187 (1) re187 (2) re187 (3) re187 (4) re187 (5) re187 (6)

Sorry, the comment form is closed at this time.