Google

யாழ் இந்தக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் திரு. வ. தவகுலசிங்கம் அவர்களது பிரியாவிடை வைபவம்…

Written on:July 1, 2016
Comments are closed

நேற்றைய தினம் (30.06.2016)  யாழ் இந்துவில் ஆசிரியர் திருவ. தவகுலசிங்கம் அவர்களது பிரியாவிடை வைபவம் மிகவும் சிறப்பாக ஆசிரியர் கழகத்தினால் நடாத்தப்பட்டது. ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு. நவனீதகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக இறைவணக்கமும் அதன் பின் கழக தலைவரின் தலைமை உரையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அதிபரின் வாழ்த்து உரையும் இடம்பெற்றது. அதன் பின்னர் விழா நாயகனுக்கு நினைவு சின்னமும் போற்கிளியும் ஆசிரியர் கழகத்தினால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆசிரியர்கள் சார்பில் திரு.சு. கோகிலன் அவர்களினதும் திரு.வ.சிவராஜா அவர்களினதும் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. அதன் பின் கழகத்தின் செயலாளர் திரு.ப.ரகுமார் அவர்களினால் நன்றி உரை நடாத்தப்பட்டது. அதன் பின் மத்திய போசனத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

Sorry, the comment form is closed at this time.