Google

கணித ஆசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஞாபகார்த்த கணித பாடத்திற்கான பதக்கமும் பரிசும்…

Written on:June 22, 2016
Comments are closed

thumb_IMG_9470_1024யாழ் இந்துக் கல்லூரியில் கணித ஆசானாக மிகச்சிறப்பாக நீண்ட காலம் சேவையாற்றி இளைப்பாறிய அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஆசிரியர் அவர்கள், வகுப்பாசானாகவும் நல்லாசானகவும் விளங்கியதோடு மட்டுமல்லாது எம் அனைவருக்கும் சிந்தனைத்தூண்டியாகவும் செயற்பட்டு மாணவர்  ஆளுமை விருத்தியில் அளப்பரிய பங்காற்றினார். கணித பாடத்தின் மீதான விருப்பத்தினை
இயல்பாகவே மாணவர்களிடம் விதைக்கும் சபாநாயகம் ஆசிரியர் அவர்களின் கற்பித்தல் பாணி உலகெங்கும் பல கணித விஞ்ஞான துறைசார் விற்பன்னர்களை உருவாக்கியிருக்கிறது. அன்னாரிடம் கல்விகற்ற 2005 உயர்தரப்பிரிவு மாணவர்களால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களிடம் கணித பாடத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் முகமாக வருடாந்தம் யாழ் இந்துப் பரிசுத்தினத்தில் கணித ஆசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஞாபகார்த்தமாகக் கணித பாடத்திற்கான பதக்கமும் பரிசும் வழங்கப்படவுள்ளது.

• இப்பரிசு இவ்வருட பரிசுத்தினம் முதல் வழங்கப்படும்.

• தரம் 6-8 மாணவர்களை ஆரம்பப்பிரிவு, மற்றும் தரம் 9-11
மாணவர்களை மத்தியபிரிவு என இரு தனிப் பிரிவுகளாகக் கருதி
ஒவ்வோர் பிரிவிலும் ஒன்பது தவணைப் பரீட்சைகளிலும் கணித
பாடத்தில் அதிகூடுதலான கூட்டுத்தொகைப் புள்ளிகளைப் பெற்ற
மாணவரிற்கு ஓவ்வோர் தங்கப்பதக்கமும் தலா 10,000 ரூபா
பணப்பரிசிலும் வழங்கப்படும்.

• அதாவது ஆரம்பப்பிரிவுக்கான பரிசு தரம் 9 இல் கற்கும் மாணவர்
ஒருவருக்கும், மத்தியபிரிவுக்கான பரிசு உயர்தரம் முதல்வருடத்தில்
கற்கும் மாணவர் ஒருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படும்.

P0001 (2)

de

thumb_IMG_9458_1024 thumb_IMG_9461_1024 thumb_IMG_9462_1024 thumb_IMG_9463_1024 thumb_IMG_9466_1024 thumb_IMG_9470_1024

 

 

Sorry, the comment form is closed at this time.