Google

மக்கள் வங்கியினால் யாழ் இந்துக் கல்லூரிக்கு பரிசு (படங்கள் இணைப்பு)

Written on:June 12, 2012
Comments are closed

திருநெல்வேலி மக்கள் வங்கி கிளையில் மாணவர்களுக்கான ‘சிசு உதான’ சேமிப்புக் கணக்கினை சிறந்த முறையில் பேணுகின்ற பாடசாலையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அண்மையில் தெரிவுசெய்யப்பட்டது. இதற்கான அன்பளிப்பாக ரூபா 50 000 ற்குரிய காசோலை மக்கள் வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் திரு.S.பத்மநாதன் அவர்களால் பாடசாலை அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு 08-06-2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது கல்லூரியின் பிரதி அதிபர் திரு.சதா.நிமலன் , ‘சிசு உதான’ சேமிப்பு பொறுப்பாசிரியர் திரு.க.மகேந்திரன் , பல்கலைக்கழக கிளை முகாமையாளர் திரு.S.சத்தியமூர்த்தி , வங்கி ஊழியர் திருமதி.சயந்தி பிரதாப் ஆகியோரும கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி அதிபர் பாடசாலைக்கு மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் சேவைகள் பற்றி பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார். பிராந்திய முகாமையாளர் உரையாற்றுகையில் சேமிப்பின் அவசியம் பற்றியும் சேமிப்புப் பழக்கம் கொண்ட யாழ் இந்து மாணவர்களின் திறன்கள் பற்றியும் பாராட்டிப் பேசினார். ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.









Sorry, the comment form is closed at this time.