Google

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேகம்…

Written on:June 23, 2016
Comments are closed

sa040இன்றைய தினம் (23.06.2016) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சிறப்பு மேள கச்சேரியும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா காங்கேசன் வீதியூடாக அரசடி வீதிக்கு வந்து பின் கஸ்தூரியார் வீதி வழியாக கல்லூரிக்கு வந்தடைந்தது. வீதியுலாவின் போது மாணவர்கள் பஜனைகள் பாடிய வண்ணம் எம்பெருமான் பின்னாலேயே வந்தனர். இம் முறை எமது கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம், Interact club ஆகியன  தாகசாந்தி நிலையங்களை அமைத்து மாணவர்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார்கள்.

இறுதி நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் வீதியுலா வந்ததனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

sa001 sa002 sa003 sa004 sa005 sa006 sa007 sa008 sa009 sa010 sa011 sa012 sa013 sa014 sa015 sa016 sa017 sa018 sa019 sa020 sa021 sa022 sa023 sa024 sa026 sa027 sa028 sa029 sa030 sa031 sa032 sa034 sa035 sa037 sa038 sa039 sa040 sa041 sa042 sa044 sa047 sa048 sa049 sa050 sa051 sa052 sa053 sa054 sa055 sa056 sa057 sa058 sa059 sa060 sa061 sa062 sa063 sa064 sa065 sa066 sa067 sa068 sa069 sa070 sa071

Sorry, the comment form is closed at this time.