Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2016

Written on:February 5, 2016
Comments are closed

j (85)யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 03.02.2016 அன்று கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழையமாணவனும், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்தியருமாகிய வைத்திய கலாநிதி இரங்கநாதன் வரதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பிற்பகல் 2.00 மணியளவில் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, விருந்தினர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவ முதல்வர்கள் கல்லூரிக் கொடியினை ஏந்தியவாறு அணி நடையின் தலைமை பெறுப்பினை பெற்று வர நாகலிங்கம், சபாபதி, பசுபதி, காசிப்பிள்ளை, செல்லத்துரை இல்லங்கள் தத்தமது வர்ண நிறக்கொடிகளுடன் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்,

எமது கல்லூரியின் பெருமை பொருந்திய நீலம் வெள்ளை கொடியானது 5 இல்லங்களினைச் சேர்ந்த இல்ல தலைவர்களினால் எடுத்துவரப்பட்டு  கொடிக் கீதம் இசைக்க கல்லூரி சிரேஷ்ட மாணவ முதல்வனால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இல்லக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.  5 இல்லக் கொடிகளும் மோட்டார் வண்டி பவனியாக மைதானத்தினை சுற்றி வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டி விதிகளுக்கமைவாக கல்லூரி சிரேஸ்ட மாணவ முதல்வனின் வழிகாட்டலில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  ஒலிம்பிக் தீபமாது கல்லூரி மெய்வல்லுனர் சாதனையாளரினால் எடுத்து வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தரம் 6 மாணவர்களின் இடைவேளை நிகழ்வு விழாவினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இம்முறை நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் செல்லத்துரை இல்லமானது 472 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து நாகலிங்கம்  இல்லம் 412 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பசுபதி இல்லம், சபாபதி இல்லம் ஆகியன 409 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், காசிப்பிள்ளை இல்லம் 306 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி விஜயரதி வரதன்அவர்கள் வழங்கி கெளரவித்தார், அதனை தொடர்ந்து உதவி சிரேஷ்ட மாணவ முதல்வனின் நன்றி உரையுடன், கல்லூரி கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

image009 image012 image018 image019 image022 image024 image038 image043 image042 image035 image032 image041 image040 image030 image027 image039 image044 image057 image079 image084 image063 image045 image046 image069 image085 image089 image074 image051 image054 image077 image093 image113 image126 image124 image108 image107 image123 image118 image105 image101 image114 image129 image140 image154 image156 image144 image131 image134 image137 image138 image151 image159 image158 image149 image147 image157 image160 j (55) j (69) j (70) j (65) image161 j (36) j (37) j (40) j (68) j (67) j (66) j (75) j (76) j (85)

 

Sorry, the comment form is closed at this time.