Google

யாழ் இந்துவில் நடைபெற்ற தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2016

Written on:January 14, 2016
Comments are closed

12570881_1013400318698165_45484194_n14.01.2016 அன்று யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும்,  தரம் 6 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், நெல்லியடி மத்திய மகாவித்தியாலய முன்னாள் அதிபர் எஸ்.சேதுராஜா, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மற்றும் ஹவாய் தொண்டு நாதசுவாமிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் பின்னர்  விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவித்து பான்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக தரம் 6 மாணவர்களும் கே.கே.எஸ் வீதி வழியாக எமது கல்லூரியின் முன் வாயிலூடாக பிரார்த்தனை மண்டபத்தினுள் வரவேற்கப்பட்டனர். அதன் பின் வருகை தந்திருந்த ஸ்வாமிகளினால் ஆசியுரையும், அதே போன்று தலைமையுரையினை  அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் நிகழ்த்தினார்கள். பின்னர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களது உரையும் பின்னர்  அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் எஸ்.சேதுராஜா போன்றோரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

இதன் பிற்பாடு யாழ் மக்கள் வங்கி கிளையினரால் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் அனைவரும் தமது புதிய வகுப்பறைகளுக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.

0 1 2 3 12467959_1013399368698260_1670675593_n 12512049_1013400085364855_148130969_n 12512075_1013399865364877_594351253_n 12512087_1013399075364956_1445912612_n 12512087_1013399525364911_528132019_n 12516061_1013399385364925_1410560112_n 12516070_1013398362031694_2112838641_n 12516155_1013400522031478_1937203596_n 12528003_1013400388698158_1005712488_n 12528112_1013397782031752_1764898982_n 12528125_1013400455364818_252088335_n 12540354_1013400145364849_301712565_n 12540373_1013399472031583_353760780_n 12540499_1013398452031685_1016628675_n 12570881_1013400318698165_45484194_n

Sorry, the comment form is closed at this time.