Google

வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்களை வென்றது யாழ் இந்து (படங்கள் இணைப்பு)

Written on:May 29, 2012
Comments are closed

வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள் 26.05.2012 , 27.05.2012ஆகிய இரு தினங்களும் வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றன.இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாக கட்டுரை வரைதலில் பிரிவு II இல் பங்குபற்றிய மாணவன் ப.பவதாரகன் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

அதே போன்று தனியிசை பிரிவு II இலும் குழு இசை பிரிவு II இலும் பங்குபற்றிய மாணவன் வத்சாங்கிதசர்மா இரண்டிலுமே முதல் இடத்தை பெற்று 2 தங்க பதக்கங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதே போன்று குழு இசை பிரிவு II இல் 10 மாணவர்கள் பங்குபற்றி அவர்களும் கல்லூரிக்காக 10 தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அவர்களது பெயர் விபரம் :

செல்வன்.வ.ஹம்சானந்
செல்வன்.அ.ஹரிசாந்
செல்வன்.ம.கீர்த்தனன்
செல்வன்.நி.சுஜீவன்
செல்வன்.வ.கஜானன்
செல்வன்.ம.கஜகிருஸ்ணா
செல்வன்.இ.பிரதீஸ்
செல்வன்.நா.வேணுஜன்
செல்வன்.ம.கோகுலன்
செல்வன்.வி.வத்சாங்கிதசர்மா
இதேபோன்று திறந்த போட்டியாக நடைபெற்ற விவாத போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான செல்வன்.இ.வினு, செல்வன்.ஜி.சஜீவன், செல்வன்.ப.பிரதீஸ் ஆகியோர் கொண்ட அணி முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுகொண்டது.

யாழ் இந்துக் கல்லூரியின் விவாத அணி கடந்த நான்கு வருடங்களாக மாகாணத்தில் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்டதோடு 2010ஆம் ஆண்டு தேசியக் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கொழும்பு பல்கலைக் கழகம் நடாத்திய விவாதப் போட்டியில் எமது அணி முதலாம் இடம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இம் மாணவர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற சேக்கிழார் விழாவின் போது சிறப்பு சொற்பொழிவாற்ற வந்திருந்த கலாநிதி.ஆறுதிருமுருகனால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இம் மாணவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறவிருக்கின்ற தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்றார்கள்.

Sorry, the comment form is closed at this time.