Google

சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு-2015

Written on:November 16, 2015
Comments are closed

12227185_922002804519544_1358478112034832929_nயாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் Dr.பொன்னுத்துரை குபேரன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜமுனாதேவி குபேரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் சபாலிங்கம் அரங்கில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரம் இடம்பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2014 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார். பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆங்கிலப் பேச்சும், தமிழ் பேச்சும் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2014ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சர்வதேச, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், விளையாட்டு வீரர்களுக்கு வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

1 23412227626_922002927852865_2985680977696670128_n12227185_922002804519544_1358478112034832929_n12122954_922002971186194_2856244480250621380_n512241671_922002757852882_6115296150570421149_nre004re00612243581_922002881186203_4784538599333661038_nre002re011re013re003re024re029re027re032re025re026re038re048re046re042re040re049re052re055re059re063

 

 

 

re064 re065 re066 (2)

 

 

 

 

Sorry, the comment form is closed at this time.