Google

யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா- 2015

Written on:November 11, 2015
Comments are closed
P1010189யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை 12.11.2015 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக Dr.பொன்னுத்துரை குபேரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மாணவர்களுக்கான பரிசில்களை திருமதி ஜமுனாதேவி குபேரன் அவர்கள் வழங்கவுள்ளார்.

குபேரன் அவர்கள் தனது இடைநிலைக் கல்வியை 1958 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்தார். 1967 இல் எங்கள் கல்லூரியில் கல்விப் பேற்றை முடித்த பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  இணைந்து மருத்துவமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். கற்ற கல்வியின் பயன் சமூகத்திற்கு சேவை செய்வதே என்பதற்கு இணங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் பதுளை பொது வைத்தியசாலையிலும் வைத்தியராகப் பணிபுரிந்தார். பின்னர் லண்டன் சென்று குருதி, இழையயியல் என்னும் துறையில் மேற்படிப்பை முடித்தார்.
image003
பின்னர் லண்டன், சிங்கப்பூர், நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராக, ஆலோசகராக பல பதவிகளை வகித்தார்.
சிங்கப்பூர் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சங்கத்தில் ஒருவராகவும், சிங்கப்பூரில் உள்ள குருதி இழையயியல் கழகத்தின் தலைவராகவும் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, கொங்கொங், பிலிப்பைன்ஸ், தாய்வான், தென்கொரியா, இலங்கை, புருணை போன்ற நாடுகளின் வருகைதரு நிபுணத்துவப் பேச்சாளராகவும் பணியாற்றினார்.
 இவரின் சேவையைக் கௌரவிக்கும் முகமாக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய சுகாதார கழகத்திற்கான விருது, சிறந்த சேவைக்கான விருது, சிறப்பு பிரஜாவுரிமைக்கான விருது, சிறந்த பெறுபேற்றுக்கான விருது, கௌரவமாக ஓய்வுபெற்றோர் ஆலோசகருக்கான விருது எனப் பல கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளார்.
jhc2015

Sorry, the comment form is closed at this time.