Google

தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 3 பதக்கங்கள்

Written on:November 10, 2015
Comments are closed

12191435_494604280711660_7380110200774692582_nஇலங்கை பளுதூக்கும் சங்கத்தினால் கனிஸ்ட பிரிவினருக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்து 3 பதக்கங்களை சுவீகரித்தது.

பொல்காவல சென்.பெனடிக் மகாவித்தியாலயத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன. யாழ் இந்துவினை சேர்ந்த மாணவர்களான ரி.விதுசன் 17 வயதுப்பிரிவில் 56Kg எடைப்பிரிவில் 156Kg எடையினை தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும், இதே வயதில் ஏ.எட்டின்வூட் 77Kg எடைப்பிரிவில் 157Kg எடையினை தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும், 20 வயதுப்பிரிவில் எஸ்.அபிசேக் 105Kg எடைப்பிரிவில் 170Kg எடையினை தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் வென்றனர். இவ் அணிக்கான பயிற்சிகளை ஆசிரியர் எஸ்.திருமாறன் வழங்கி வருகின்றார்.

12189731_494604287378326_8803794370767076142_n 12191435_494604280711660_7380110200774692582_n 11222062_494604284044993_4692032423540932530_n

Sorry, the comment form is closed at this time.