Google

சர்வதேச, தேசிய ரீதியில் சாதனை புரிந்த யாழ் இந்து மாணவர்கள், யாழ் இந்து சமூகத்தினரால் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)

Written on:May 28, 2012
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியில் சார்பாக சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்த மாணவர்கள் இன்றைய தினம் (28.05.2012) இந்துக் கல்லூரி சமுகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இம் மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் சகிதம் கஸ்தூரியார் வீதி சுற்றுவட்டத்தில் இருந்து பான்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின் தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் சாதனை மாணவர்கள் அதிபரினால் கௌரவிக்கப்பட்டார்கள்.

அதனடிப்படையில் சர்வதேச ரீதியாக தென்னாபிரிக்காவில் நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை வென்ற வித்தியாசாகர், கரிசங்கர்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றி உயரம் பாய்தலில் தங்கப்பதக்கத்தினை வென்று சாதனையை நிகழ்த்திய செந்தூரன். அதே போன்று நீளம் பாய்தல், முப்பாய்சலில் தேசிய ரீதியில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்ற யஸ்மினன்.

கடந்த வருட இறுதியில் தேசியமட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் Creative Writing இல் முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தினை வென்ற குணவரன். ஆகியோரே இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்களாவர். இவர்களுடன் இவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

இன்றைய நிகழ்வில் உயரம் பாய்தலில் சாதனை புரிந்த செந்தூரனுக்கு Australia Sydney Sports Sub Committee இனால் வழங்கப்பட்ட ரூபாய் 10,000 பெறுமதியான பணமும் அவருக்கான வாழ்த்து செய்தியும் அதிபரினால் வழங்கப்பட்டது.

இதேபோன்று இன்றைய நிகழ்வில் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட லண்டன் வாழ் பழைய மாணவரான T.மோகனதாஸ் என்பரால் உடனடியாக மேடையில் வைத்து ஏனைய 4 மாணவர்களுக்கும் தலா 10,000 ரூபாய்கள் ஆக மொத்தம் 40,000 ரூபாய்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தற்போது லண்டனில் இருக்கும் எமது கல்லூரியின் பழைய மாணவனும், Cricket, Football, athletic Captain ஆகவும் விளங்கிய Dr. T.சிவபாக்கியநாதன் என்பரால் எமது கல்லூரிக்கு பயன்படுத்தவென சுற்றுக்கேடயம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

Sorry, the comment form is closed at this time.