Google

வடமாகாண மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்து ஒன்பது இடங்களை தனதாக்கியக் கொண்டது.

Written on:July 27, 2015
Comments are closed

h* 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தனுசன் மைதான நிகழ்வில் சிறந்த வீரனாக தெரிவு.

அண்மையில் வடமாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் யாழ் இந்துக்கல்லூரி நான்கு முதல் இடங்கள் உட்பட ஒன்பது இடங்களை தனதாக்கிக் கொண்டது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சி.துஸ்யந்தன் முப்பாய்ச்சல் நிகழ்வில் 12.49 M தூரம் பாய்ந்து முதலாம் இடத்தையும், 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் க.தனுசன் 1.92 M உயரம் பாய்ந்து முதலாம் இடத்தையும், 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மு. பிரசான் நீளம் பாய்தலில் 4.95 M தூரம் பாய்ந்து முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். அதே போல் 200 M ஓட்ட நிகழ்வில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் செ. ஏனோக்ராஜ் 6.31M தூரம் பாய்ந்து நீளம் பாய்தல் நிகழ்வில் இரண்டாம் இடத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ப.கஜலக்மன் 6.33M தூரம் பாய்ந்து இரண்டாம் இடத்தையும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உயரம் பாய்தலில் கி.மோகனப்பிரசாந் 1.92 M பாய்ந்து மூன்றாம் இடத்தையும் பெற்றதோடு ப. கஜலக்சனும் முப்பாய்ச்சல் நிகழ்வில் 12.89 M பாய்ந்து மூன்றாம் இடம் பெற்றார். அதே போல் மு. பிரசான் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 100 M ஓட்ட நிகழ்வில் மூன்றாம் இடம் பெற்றுக்கொண்டார்.

மேற்படி வீரர்களின் வெற்றிக்கு அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர், மேற்பார்வையில் பயிற்சியையும் பயிற்சிநெறிப்படுத்தலையும் க. சுவாமிநாதன் வழங்கியதோடு பயிற்சியினை சி. றஞ்சித்குமார், செ. சுகிர்தன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி மெய்வல்லுநர் போட்டியின் தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் ஐப்பசி மாதம் கொழும்பு டியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் எட்டாம் திகதி முதல் பன்னிரண்டாம் திகதி வரை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

h

b

Sorry, the comment form is closed at this time.