Google

யாழ் இந்துவின் கவிஞன் உமாகரனால் வெளியிடப்பட்ட ”பூக்களுடன் கன்னி” எனும் கவிதை நூல் (படங்கள் இணைப்பு)

Written on:May 23, 2012
Comments are closed

இன்றைய தினம் (23.05.2012) யாழ் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் அனுசரனையுடன் உயர்தர வகுப்பு மாணவன் உமாகரன் அவர்களின் ஆக்கத்தில் உருவான ”பூக்களுடன் கன்னி” எனும் கவிதை நூல் அறிமுக விழா காலை 11.30 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவின் தலைவராக கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்களும், பிரதம விருந்தினராக AAA Ventures இன் தலைவர் திரு.க.செவ்வேள் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள். இந் நூலின் ஆய்வுரையை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக உதவி விரிவுரையாளர் திரு.தி.செல்வமனோகரன்அவர்கள் நிகழ்தினார். இவ் விழாவில் ஆசிரியர்கள், மாணவார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.

Sorry, the comment form is closed at this time.