Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் – 2015

Written on:July 11, 2015
Comments are closed

tamilday057யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இவ்வருட தமிழ்மொழித்தின விழாவானது 09/07/2015(வியாழக்கிழமை) அன்று தமிழ்ச்சங்கத்தினால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதற்கு பிரதம விருந்தினராகபேராசிரியர்.வ.மகேஸ்வரன்(தலைவர், தமிழ்த்துறை,பேராதனைப்பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து கொண்டார். முதன் நிகழ்வாக பிரதம விருந்தினர் உட்பட ஏனைய விருந்தினர்கள் மங்கள வாத்தியம் இசைக்க ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

இதன் பின்னர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் தின வாழ்த்து ஆகியன இடம் பெற்றன. இதன் பின்னர் யாழ் இந்து மாணவர்களது சிறப்பான வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்புரையும்,அதன் பின்னர் தலைமையுரையினை விழாத்தலைவர் செல்வன்.ப.தர்சனன் நிகழ்த்தினார் அதன் பின் கல்லூரி அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பொறுப்பாசிரியர் உரையும் பின்னர் பிரதம விருந்தினர் பேராசிரியர்.வ.மகேஸ்வரன்அவர்களது உரையும் இடம் பெற்றது.

பின்னர் பிரதம விருந்தினரால் கோட்ட மட்ட வலய மட்ட மாகாண மட்ட தேசிய மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக குழு இசையும் அதனை தொடர்ந்து நடனம் வில்லுப்பாட்டு பேச்சு நாடகம் ஆகிய நிகழ்வுகள் கல்லூரி சமுகத்தின் முன் அரங்கேற்றப்பட்டது. எமது கல்லூரி விவாதிகளை வளர்த்தெடுத்த ஆசான் சிவராஜா அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து “பழந்தமிழ் இலக்கியங்கள் இளைஞர்களை சீர்ப்படுத்துகின்றதா சீரழிக்கின்றதா”எனும் தலைப்பில் கல்லூரி விவாத மாணவர்கள் இருபகுதியாக அமர்ந்திருந்து விவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.
tamilday010 tamilday011 tamilday018 tamilday022 tamilday030 tamilday033 tamilday035 tamilday038 tamilday041 tamilday042 tamilday044 tamilday046 tamilday048 tamilday050 tamilday051 tamilday052 tamilday053 tamilday054 tamilday055 tamilday064 tamilday063 tamilday060 tamilday059 tamilday057 tamilday066 tamilday094 tamilday095 tamilday069 tamilday070 tamilday103 tamilday106 tamilday072 tamilday080 tamilday125 tamilday166 tamilday132 tamilday146 tamilday170 tamilday174 tamilday150 tamilday159 tamilday177 tamilday184 tamilday161 tamilday191 tamilday195 tamilday206 tamilday213 tamilday215

Sorry, the comment form is closed at this time.