Google

இந்துக்களின் மாபெரும் போர் – 2015

Written on:May 24, 2015
Comments are closed
11209363_841228099260168_1276468267992756364_nஇந்துக்களின் மாபெரும் போர்” என்று பெருமையாக அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 6 வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது இம் மாதம் 29,30 ஆகிய தினங்களில் பம்பலப்பிட்டி கோல்ஸ் கிரிக்கட் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. ”இந்துக்களின் போர்” எனும் துடுப்பாட்ட போட்டியானது யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்தன. பின்னர் இப் போட்டியினை நடாத்துவதற்கு சரியான சூழ்நிலைகள் இல்லாமையால் கடந்த காலங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனது. இருந்தும் மீண்டும் ஆரம்பமாகிய இப்போட்டியானது கடந்த வருடம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான 6 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது இம் மாதம்29,30 ஆம் தேதிகளில் பம்பலப்பிட்டி கோல்ஸ் கிரிக்கட் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

1982ம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்துக்களின் மாபெரும் போர்,முதன்முறையாக பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வருடப் போட்டி 1983ம் ஆண்டு இடம்பெற்றிருந்ததோடு,அப்போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வெற்றி பெற்ற நிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது. நடந்து முடிந்த 5 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வென்றும் ஒரு போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி வென்றும் மற்றைய இரண்டு போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்தது இதனடிப்படையில் 2-1 என்று இருக்கின்ற நிலையில் இம்முறை அது சமப்படுத்தப்படுமா இல்லை தொடர்ந்தும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியே முன்னிலை பெறுமா என்கிற ஆர்வம் பலருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று தசாப்த பழமை வாய்ந்த இந்த துடுப்பாட்ட போட்டியானது இரண்டு பலமான அணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை ரசிகர்களாகக் கொண்ட ஆதரவு,பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு,நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி இற்குமிடையிலான இந்த 6 வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியை அதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றியுள்ளது.
11209363_841228099260168_1276468267992756364_n

Sorry, the comment form is closed at this time.