Google

கொழும்பு பல்கலைக்கழகம் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றது யாழ் இந்து

Written on:May 13, 2012
Comments are closed

கொழும்பு பல்கலைகழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விவாத போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணி மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும் நாடக போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டது. நாடகத்தில் மொத்தமாக 6 அணிகளும் விவாதத்தில் மொத்தமாக 7 அணிகளும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் சங்க நாடக போட்டியில் யாழ் இந்து அணி மூன்றாம் இடத்தை பெற்றிருந்தாலும் நாடகத்துக்கான பின்னணி இசை அனைவரையும் வெகுவாக கவர்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சோக பாடல் ஒன்று இசைக்கப்படும் போது சபையில் இருந்த அனைவரினதும் கண்களில் இருந்து வந்த கண்ணீரிலிருந்து வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் புள்ளிதிட்டத்தில் இசைக்குபெரியளவு முக்கியத்துவம் வழங்காமல் இருந்தமை பெரும் ஏமாற்றத்துக்கு உரியதாகும். எனினும் இந்துவின் இளசுகள் ஆரம்பித்து குறுகிய காலத்தில் எதிர்பார்த்த இசை புரட்சிகளை மிகுந்த ரசனையுடன் இளசு அங்கத்தவர்கள் படைகின்றமை பெருமையானதொன்றாகும். இந்த நாடகத்துக்கு மதீசன் இசை வழங்க, தயானந்தன் ரபான் வாத்திய கருவியுடனும் மயூரேசன் பாடகராகவும் தமது பணியை நிறைவேற்றினர்.

விவாதப் போட்டியில் பங்குபற்றிய அணியின் விபரம்:

பொறுப்பாசிரியர் : திரு.வா.சிவராஜா
மாணவ அணி :
1. ஜீ.சஜீவன்.
2. ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ
3. ப.பிரதீஸ்
4. அ.திருமருகன்
5. ச.சத்தியசீலன்

Sorry, the comment form is closed at this time.