Google

யாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட “சபாலிங்கம் அரங்கம்”..

Written on:March 30, 2015
Comments are closed

sports090யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட சபாலிங்கம் கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தினம் முதல் நிகழ்வாக யாழ் இந்து மைதானத்தில் உள்ள வைரவர் கோயிலில் பூசை நடைபெற்று விருந்தினர்கள் அனைவரும் மேள வாத்தியத்துடன் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலினூடாக சிவஞான வைரவப் பெருமான் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு பூசை நடைபெற்று விருந்தினர்கள் அனைவரும் புதிதாக அமைக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினரும், முன்னாள் அதிபருமாகிய திரு.ச.பொன்னம்பலம் அவர்களால் அரங்கத்திற்கான கல்வெட்டு திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

zz

அதன் பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் சபாலிங்கம் அரங்கினுள் ஆரம்பமாகியது. முதன் நிகழ்வாக மங்கல விளக்கேற்றலும் அதனை தொடர்ந்து இறைவணக்கமும் இடம் பெற்றது. இதன் பின்னர் முன்னாள் அதிபர் சபாலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக சிறப்பு மலர் வெளியீடு ஒன்று நடைபெற்றது. இம் மலரினை முன்னாள் அதிபர் சபாலிங்கம் அவர்களுடைய மகன் Dr.ச.ஜோதிலிங்கம் வெளியிட்டு வைக்க அதனை யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திரு. சண்முகநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து Dr.ச.ஜோதிலிங்கம் அவர்களுடைய மகன் தீபன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் கல்லூரி முதல்வர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்களினால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து இவ் சபாலிங்கம் அரங்கினை அமைத்துக் கொடுத்த Dr.ச.ஜோதிலிங்கம் தம்பதியினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. பின்னர் யாழ் இந்துவின் யாழ்ப்பாண பழைய மாணவ சங்கத்தின் தலைவர் அவர்களினால் அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்டுமான ஒப்பந்தக்காரர் Dr. ச.ஜோதிலிங்கம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.. பின்னர் யாழ்ப்பாண பழைய மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. Dr. E. தேவநேசன் அவர்களால் இச் செயற்றிட்டம் பற்றிய அறிமுகம் ஒன்று வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முன்னாள் அதிபர்களாகிய திரு.அ.பஞ்சலிங்கம், திரு.ச.சிறீக்குமார், திரு.வீ.கணேசராசா போன்றோரின் உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து “பரதநாட்டியத்தில் சிவபுராணம்” எனும் பரதநாட்டிய நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாண பழைய மாணவ சங்கத்தின் தலைவர். திரு.ந.சுந்தரேஸ்வரன் திரு.ஆறு.திருமுருகன், திரு. M.C.பிரான்சிஸ், திரு.ந.வித்தியாதரன், திரு.க.ஸ்கந்தமூர்த்தி போன்றோரது சில சிறப்புரைகள் இடம்பெற்றன.

இதன் பின்னர் இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினரும் முன்னாள் அதிபருமாகிய திரு.ச.பொன்னம்பலம் அவர்களுடைய உரை இடம்பெற்றது.

பின்னர் சபாலிங்கம் அரங்கை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இவ் அரங்கினை உருவாக்கிய திரு.Dr..ச.ஜோதிலிங்கம் அவர்களினால் கல்லூரி அதிபர் மற்றும் பழைய மாணவ சங்கதின் தலைவர் அவர்களிடம் இவ் அரங்கு கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவருடைய ஏற்புரை இடம்பெற்றது.

பின்னர் நன்றியுரையினை கல்லூரியின் பிரதி அதிபர் திரு.சதா.நிமலன் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து கல்லூரி கீதமும் தொடந்து மதிய போசனத்துடனும் இந் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

zza
zzx

 

zzw

Sorry, the comment form is closed at this time.