Google

V.T.S.Sivagurunathan Trophy 2015

Written on:April 18, 2015
Comments are closed
sivagurunathanKinnam2015_1யாழ் இந்து கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையேயான 4 வது “சிவகுருநாதன் கிண்ணத்துக்கான” மாபெரும் கிரிக்கட் போட்டி ஏப்ரல் 24&25ஆம் தேதி (வெள்ளி மற்றும் சனிகிழமைகளில்) யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
யாழ் இந்து 125 வருட நிறைவில் அடிஎடுத்து வைத்திருக்கும் இவ்வேளை அதனை முன்னிட்டு இவ் துடுப்பாட்ட போட்டி இன்னும் விமரிசையாக கொண்டாடப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
unnamed
கடந்த வருடம் கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றி பெற்ற நிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது. 2-1 என்ற நிலையில் ஆனந்தா கல்லூரி முன்னிலை வகிக்கும்  இப்போட்டியின் முடிவு இம்முறை மாற்றப்படுமா என்கிற ஆர்வத்துடன் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.யாழ் வீரர்கள் கொழும்பு வீரர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதுடன் கடந்த வருட ஆனந்தா கல்லூரி வெற்றிக்கு கல்லூரி பழைய மாணவர்களும் அவர்களது முழு ஆதரவும் தான் முக்கிய காரணமாகும்.
AC
அதே போல இம்முறையும் எமது பழைய மாணவர்களின் ஆதரவு பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது.

Sorry, the comment form is closed at this time.